கிருஷ்ணவேணி பஞ்சாலை
80களில் இருந்த பஞ்சாலை மில் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் இந்தப் படத்தை தனபால் பத்மநாபன் இயக்கியிருக்கிறார்
கிருஷ்ணவேணி பஞ்சாலை
வைரமுத்துவுக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானை அடுத்து தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் இணைந்திருக்கும் இசையமைப்பாளர் என்.ஆர்.ரஹ்நந்தன்தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர்.
கிருஷ்ணவேணி பஞ்சாலை
ஆஹா படத்தில் ஹீரோவாக அறிமுகமான ராஜீவ் கிருஷ்ணா இந்தப் படத்தில் பஞ்சாலை முதலாளி பாத்திரத்தில் பந்தாகாட்டுகிறார்
12 March 2011
ஜாப்பானில் ஏற்பட்ட சுனாமியின் நேரடிக் காட்சிகள்
Posted by Gunalan Lavanyan
12:20 AM, under வீடியோ | No comments
வீடியோ 1
வீடியோ 2
வீடியோ 3
வீடியோ 4
11 March 2011
சுகமான சுகப்பிரசவம்
Posted by Gunalan Lavanyan
11:32 PM, under ஹெல்த் | No comments
‘பெண்ணின் திருமண வயது 21’ என்று எல்லா ஆட்டோக்களின் முதுகிலும் பார்த்து இருப்பீர்கள். அதற்குக் காரணம், பெண் குழந்தை பெறுவதற்கான தகுதியை எட்டுவது இந்த 21 வயதில்தான் என்பது நாம் அறிந்ததே! ‘‘அதேபோல, 35 வயதுக்கு மேல் குழந்தை பெறுவதும் சில நேரங்களில் ஆபத்தை விளை விக்கலாம். எனவே, சுகப்பிரசவத்துக்கு கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளும் உணவு முறைகளும் நிறைய இருக் கின்றன’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த, பிரபல மகளிர் நோய் மருத்துவர் கே.பாலகுமாரி.
தாய்மையின் வயது
‘ ‘ ஒரு பெண், தாய்மை அடைவதற்கான சரியான பருவம் 21 வயதிலிருந்து 35 வயதுக்குள்தான். 21 வயதுக்கு முன்போ அல்லது 35 வயதுக்குப் பின்போ தாய்மை அடைவதால், பிறக்கப்போகிற குழந்தையும் சரி, தாய்மை அடைகிற பெண்ணும் சரி பல சிக்கல்களையும், நோய்களையும் சந்திப்பதற்கான ஆபத்து அதிகம். இருபத்தியோரு வயதுக்குப்பின் குழந்தை பெறுவதால், பிறக்கும் சிசுவுக்கு நோய்த் தாக்குதல்கள் குறைவு. அதனால், சிசுவியின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். சில நேரங்களில் இப்படி மருத்துவ விதியை மீறி குழந்தை பெறும்போது தாயும் சேயும் நல்ல ஆரோக்கியத்தோடும் இருந்திருக் கிறார்கள்.
ஆனால், இது விதிவிலக்கு மட்டுமே. எல்லோருக்கும் இப்படி நேரும் என்று சொல்லமுடியாது. அதனால்தான், அரசாங்கமே பெண்ணின் திருமண வயதை வரையறுத்திருக்கிறது. எதனால் வயது வரையறுத்து வைத்திருக்கிறார்கள் என்றால், அந்தப் பருவத்தில்தான் ஒரு பெண், தாம்பத்திய வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை அடைகிறாள். அப்போது தாம்பத்தியம் வைத்துக்கொள்ளும்போது கரு முட்டைகளும் வீரியத்தோடு வளர்ச்சியடைந் திருக்கும். கருமுட்டையின் வளர்ச்சியில்தான் குழந்தையின் ஆரோக்கியமே அடங்கியிருக்கிறது. அதேபோல பிரசவமும் நார்மலாக இருக்கும். சிசேரி யனைத் தவிர்க்கமுடியும். குழந்தையை வளர்ப்பதற்கு தாய் நல்ல சக்தியோடு திடகாத்திரமாக இருப்பாள்.
சராசரியாக 21 வயதுக்குப் பிறகு திருமணம் செய்துகொண்டு, குழந்தை பெற்றுக் கொள்கிற பெண்ணுக்குப் பிறக்கிற குழந்தை, வளர்ந்து அதே 21 வயது அடையும் போது, தன் வாழ்க்கையைத் தானே கவனித்துக் கொள்கிற பக்குவத்தை அடைந்துவிடும். அப்போது, தாய்க்கும் 42 வயது ஆகியி ருக்கும். அந்த நடுத்தர வயதிலேயே அவளும் தன் பிள்ளைக்குத் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டால், தன்னுடைய வாழ்க்கைச் சுமையை ஓரளவுக்குக் குறைத்துக் கொள்ள முடியும். இளைய வயதில் ஓடியாடி வேலை பார்த்தது மாதிரி 50 வயதுக்குப் பிறகு அவளால் செயல்படமுடியாமல் போவதற் கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால், ஒரு பெண் 21 வயதிலிருந்து 35 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்வது அறிவியல் பூர்வமாக நல்லது என்றே சொல்வேன்.
கர்ப்பகால உணவு முறைகள்
அடுத்து, கர்ப்பகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் உணவு முறைகள் பற்றி பார்க்கலாம். குழந்தை வயிற்றில் இருக்கும்போது, எடை அதிகமாக உள்ள பெண்கள் 5 முதல் 7 கிலோ வரை எடை கூடலாம். அதுவே ஒல்லியானவர்களாக இருந்தால், 12 முதல் 15 கிலோ வரைகூட எடை ஏறலாம். தவறில்லை. அதேநேரத்தில், முதல் 3 மாதங்களுக்கு எடை கூடவேண்டும் என்ற அவசியம் இல்லை. வாந்தி எடுப்பதால் சிலர் எடை குறைவார்கள்; அதுவும் தவறில்லை. அடுத்து, 3-ல் இருந்து 5 மாதங்களுக்கு 2 முதல் 3 கிலோ வரை ஏறலாம். அதன்பிறகு, 5-ல் இருந்து 10 மாதங்களுக்கு 5 முதல் 7 கிலோவரை எடை கூடலாம். முதல் 5 மாதங்களுக்கு உணவு அளவை அதிகப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. ஐந்தாவது மாதத்துக்குப்பிறகு, 1 வேளைக்கு 300 கலோரி கொண்ட உணவை எடுத்துக்கொண்டால் போதுமானது. உதாரணத்துக்கு 1 இட்லி, 1 வாழைப் பழம், 1 டம்ளர் பால். இதில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற உணவை 300 கலோரி அளவுக்கு மாற்றியும் உட்கொள்ளலாம். சில பெண்கள், ‘குழந்தைக்கும் சேர்த்து சாப்பிடுகிறேன்’ என்று, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். இதனால், அதிக குண்டாகி சிசேரியன் செய்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.
ஒல்லியாக இருப்பவர்களைவிட குண்டாக இருக்கும் பெண்கள்தான் உணவு விஷயத்தில் கூடுதல் ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும். முதலில் நிறைய சாப்பிடக் கூடாது. கட்டாயம் சர்க்கரை கலந்த உணவையோ, அதிக எண்ணெய் கலந்த பதார்த்தத்தையோ உட்கொள்வதைத் தவிர்க் க வேண்டும். சாதாரண மாக, எல்லாப் பெண்களும் எண்ணெய், சர்க்கரை, பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஒல்லியானவர்கள் எந்த பழங்கள், காய்கறிகளை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், குண்டானவர்கள் அதிக சர்க்கரை உள்ள வாழை, பலா, மாம்பழத்தைக் கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும். அதேமாதிரி கிழங்கு வகைகள், கொட்டைகள், மாமிசங்களையும் தவிர்க்க வேண்டும். இரும்புச்சத்து நிறைந்த பேரிச்சம்பழத்தை தேனில் நனைக்காமல் சாப்பிடலாம்.
ஒரே வரியில் சொல்வதென்றால் கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்த்தால், சுகமான சுகப்பிரசவம்தான்!’’
ஒரே வரியில் சொல்வதென்றால் கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்த்தால், சுகமான சுகப்பிரசவம்தான்!’’
- சா.இலாகுபாரதி
நம் தோழி, பிப்ரவரி 2011
09 March 2011
பெண்ணுரிமையைப் போற்றும் நாடு!
Posted by Gunalan Lavanyan
10:37 PM, under பேட்டி | No comments
படிப்பதற்காக நியூஸிலாந்துக்கு போனார் சென்னை தமிழ்ப் பொண்ணு புவனா. அங்கு போனபிறகு தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றங் களையும் நியூஸிலாந்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள ஒற்றுமை வேற் றுமைகளையும் பகிர்ந்துகொள்கிறார்.
08 March 2011
அனுஷ்கா + ப்ரியாமணி + நாகர்ஜூன் = வம்பு கூட்டணி!
Posted by Gunalan Lavanyan
11:35 PM, under கேலரி | No comments
தெலுங்கில் வெளியாகி சக்கைப் போடு போட்ட ரகடா படம் தமிழில் பெயர் வம்பு. இந்தப் படத்தில் அனுஷ்கா, ப்ரியாமணி, சார்மி என்று கவர்ச்சிக்கு தாராளம் காட்டும் நடிகைகள் நடித்திருக்கிறார்கள். ஆந்திராவில் சக்கைப் போடு போட்டுவரும் ரகடா தமிழ் ரசிகர்களையும் ஒரு கலக்கு கலக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் அந்தப் படத்தை தமிழில் வெளியிடும் பத்ர காளி பிலிம்ஸ் பிரசாத் ராவ், ஏ.வெங்கட்ராவ்.
'வம்பு' பட பாடல் காட்சிகளில் இருந்து சில படக் காட்சிகள்... கலக்கலான காதல் பாடல் வரிகளுடன்...
'சக்கைப் போடு போடு ராஜா உன் காட்டுல மழை பெய்யுது'
'இச்சுத்தா இச்சுத்தா கண்ணத்துல இச்சுத்தா...'
'காதல் வைபோகமே...'
'ஆத்தாடி பாவட காத்தாட...'
'நெஞ்சே நெஞ்சே நீ நெருங்கிவிடு...'
'கவிதை அரங்கேறும் நேரம்... மலர்க் கணைகள் பரிமாறும் தேகம்...'
'கட்டிப்புடி கட்டிப்புடிடா... கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா...'
'தொட்டால் பூ மலரும்... தொடாமல் நான் மலர்ந்தேன்...'
'அப்படி போடு... போடு... அசத்திப் போடு கண்ணாளே...'
'தொட்டுக்கவா... முட்டிக்கவா...'
07 March 2011
தலைவர் ஜீவா மருமகளின் சேவை
Posted by Gunalan Lavanyan
11:18 PM, under பேட்டி | No comments
மாமா மாணவர்களுக்காக ஆசிரமம் நடத்தினார். மருமகள் முதியோர் களுக்காக ஆசிரமம் நடத்திவருகிறார். சென்னை, தாம்பரத்திலிருந்து முடிச்சூர் ரோடு வழியாகப் போனால் வருகிறது மண்ணிவாக்கம். இந்த ஊரில்தான், அமரர் ஜீவா நினைவு அறக்கட்டளையின் சரணாலயம் செயல்படுகிறது. நிர்க்கதியாக வருகிற முதியோர்களுக்கு ஆதரவு அளித்து, இந்த ஆசிரமத்தில் பாதுகாத்து வருகிறார், சுதந்திரப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான ஜீவாவின் மருமகள் விஜயலட்சுமி மணிக்குமார்.
இவர் நடத்திவரும் அந்தச் சரணாலயத்துக்குச் சென்றபோது, அங்கு இருக்கும் முதியோர் தங்கள் வேலைகளைத் தாங்களே செய்துகொண்டு இருந்தனர். நம்மைப் பார்த்ததும் மரியாதையோடு கையெடுத்துக் கும்பிட்டார்கள். ‘‘இவங்க எல்லாரையும் எங்க குடும்ப உறுப்பினர்கள் மாதிரிதான் கவனிச்சிக்கிறோம்’’ என்று சாந்தமான குரலில் சொன்னார் விஜயலட்சுமி.
ஆசிரமம் நடத்தவேண்டும் என்பது இவர் திட்டம் போட்டுச் செய்த காரியம் அல்ல. ஜீவா காங்கிரஸ் தொண்டனாக இருந்தபோது நாகர்கோயில் அருகே சிராவயலில் காந்தி ஆசிரமம் அமைத்து ஏழை, எளிய மாணவர்களுக்குக் கல்வி கற்றுத்தந்தார். அந்த ஆசிரமத்துக்கு மகாத்மா காந்தி வந்தபோது ஜீவாவைப் பார்த்து, ‘நீ இந்தியாவின் சொத்து’ என்று பாராட்டினார். ஆனால் அந்த ஆசிரமத்தைத் தொடர்ந்து நடத்த அவரால் முடியவில்லை.
‘‘ஆசிரமம் நடத்த வேண்டும் என்பது மாமாவுடைய கனவு. ஆனால் சிராவயல் ஆசிரமத்தை தொடர்ந்து நடத்த முடியலேங்கிற வருத்தம் அவருக்கு இருந்ததுன்னு கேள்விப்பட்டோம். அதனாலே, எங்க திருமண நாள், குழந்தைகளோட பிறந்த நாள்களில் ஆசிரமங்களுக்கு போய் அங்கே இருக்குற வங்களோடு இனிப்பு பலகாரங்களை பகிர்ந்துகிட்டு, மகிழ்ச்சியை வெளிப் படுத்திட்டு வருவோம். இதைப் பார்த்துட்டு அந்த ஆசிரமத்தை நடத்துறவங்க ளே, ‘உங்க மாமா ஜீவாவே ஆசிரமம் நடத்தின-வர்தானே, நீங்களே ஏன் ஆசிரமம் ஆரம்பிக்கக் கூடாது?’ன்னு கேட்டாங்க. ஆனா, நிதி ஆதாரம் இல்லாம எப்படி ஆரம்பிக்கிறதுங்கற கவலை எனக்கும் என் கணவருக்கும் வந்தது. இதை நண்பர்களிடம் சொன்னபோது, ‘அதுக்காகவா தயங்கறீங்க... நல்லது செய்ற துக்கு நீங்க இருக்கீங்க... உதவி செய்றதுக்கு நாங்க இருக்கோம்’னு சொன் னாங்க... மனசுக்கு நிறைவா இருந்தது.
2005இல் மாமா பெயர்லயே அறக்கட்டளையை ஆரம்பிச்சு ஆசிரமத்தை தொடங்கினோம். இடையிலே மேல்மருவத்தூர் பக்கத்-துலே இருக்கிற சோத்துப் பாக்கம் கிராமத்துலே அறக்கட்டளைக்காக ஒரு நிலம் வாங்கினோம். அந்த நிலத்-துலே விளையிற அரிசி, பயிர்களை ஆசிரமத்துக்காகப் பயன் படுத்திக்கறோம்.
அதேநேரத்துல, ஸ்டேட் பாங்க் பென்ஷனர்ஸ் அசோஸி யேஷன், கனரா பாங்க் எம்ப்ளாயீஸ் அசோஸியேஷன் எல்லா உதவியும் செய்றாங்க. இந்து மிஷன் ஹாஸ்பிடல் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன் கருணை உள்ளத்தோடு முதியோர்களுக்காக இலவச சிகிச்சை அளிக்கிறதுக்கு, தன்னோட ஹாஸ் பிடல்லே ஏற்பாடு செய்திருக்கிறார். அதனாலே, எந்த பிரச்னைன்னாலும் இந்து மிஷன் ஹாஸ்பிடல்லே முதியோர்களை அட்மிட் பண்ணுவோம்.
ஆனா, மருந்து மாத்திரை வாங்குறதுக்கு மட்டும் கொஞ்சம் சிரமமா இருக்கு. அப்படி நிதி பற்றாக்குறை வர்ற நேரத்துலே நானும், என் கணவரும் எங்க சம்பள பணத்திலேருந்து எடுத்து செலவு செய்யறதுக்கு தயங்குனது இல்லை. ஆனா, எங்க ரிடயர்ட்மென்ட்டுக்குப் பிறகு இந்தமாதிரி செலவுகளை எப்படி சமாளிக்கப் போறோம்னு தெரியலை.
விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்துட்டே போறதாலே, நிதி பற்றாக்குறையை சமாளிக்க கஷ்டமா இருக்கு. சிலர் பெட்ஷீட், முதியோர்களுக்கான துணி மணின்னு உதவி செய்றாங்க. சிலர் தானே முன்வந்து அரிசி, பருப்புன்னு வாங்கி கொடுப்பாங்க. பரிபூர்ண சந்தோஷத்தோட அவங்க உதவுறதை பார்க்கும்போது ஆசிரமத்தை நடத்துறதுலே இருக்குற சிரமங்கள் பனி போல விலகிடும்.
சிரமங்கள் வரும்போது ஆதரவற்ற முதியோர்களோட வாழ்க்கையை நினைச்சு பார்ப்போம். அதோட ஒப்பிட்டா எங்க சிரமம் ஒண்ணுமே இல்லன்னு தோணுது. சிலர் பெத்தவங்களை பாத்துக்கக்கூட மனசு இல்லாமே இங்க வந்து விட்டுட்டு போயிடுவாங்க. காரணம் கேட்டா... ‘‘அப்பாவுக்கும் என் பொண்டாட்டிக்கும் ஆகமாட்டேங்குதுமா... எனக்கு அப்பாவை என்னோட வெச்சுக்கணும்னுதான் ஆசை. ஆனா, என் பொண்டாட்டியை நினைச்சா மனசு பதறுது. அவளை சமாதானப்படுத்தி அப்பாவை பாத்துக்கச் சொன்னா... ‘உன் அப்பன் சம்பாதிக் கும்போது பொண்ணுக்கு கொடுத்தான், இப்ப நிலைதப்பி போனபிறகு நான் கஞ்சி ஊத்தணுமா’’னு கேக்குறா... என்ன பண்றதுன்னே தெரியாத நேரத்துலே தான் இந்த அட்ரஸ் கிடைச்சது. அதுவும் எனக்கு சம்பளம் வேற குறைச்சலா இருக்கிறதாலே பணம் கட்டி அவரை முதியோர் இல்லத்துலே விடமுடியலே... அதனாலேதான் ஜீவா சரணாலயத்துலே இலவசமா விட்டுட்டு போறேன். அவரை பார்த்துக்கோங்கம்மா... பணம் கிடைக்கும்போது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து பார்த்துட்டு போறேம்மா’’ன்னு சொல்வாங்க.
மனசு துடிக்கிற மாதிரியான இந்தக் கதைகளை கேட்கும்போது, எங்களுக்கு ஒரே கேள்விதான் தோணும். ‘எங்களால பார்த்துக்க முடியலேன்னு பிள்ளை களை பெத்தவங்க கைவிட்டிருந்தா பிள்ளைகளோட கதி என்ன ஆகுறது..?’ மாமா இருந்திருந்தா, இப்படிப்பட்ட பிள்ளைகளை நினைச்சு என்ன பாடு பட்டிருப்பார்..? இந்த முதியோர் இல்லத்தை நடத்துறதுலே எங்களுக்கு பணத்துலேதான் சிரமமா இருக்கே தவிர, மனசுலே சிரமம் இல்லை. பிள்ளைகளும் இதை உணர்ந்தாங்கன்னா பெத்தவங்களை கைவிடுவாங் களா..?’’ விஜயலட்சுமியின் கேள்வி மனதைக் கனக்கச் செய்கிறது. இளைய தலைமுறை இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது?
- சா.இலாகுபாரதி,
படங்கள்: கமல்
நம் தோழி, பிப்ரவரி, 2011
05 March 2011
திமுக - காங்கிரஸ் பிளவு ஏன்? - வேகமான அலசல்
Posted by Gunalan Lavanyan
10:52 PM, under கட்டுரை | 2 comments
ஸ்பெக்ட்ரம் முறைகேடு அம்பலமானதில் இருந்தே திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே சரியான உறவு இல்லாமல்தான் இருந்தது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கார்த்திக் சிதம்பரம், யுவராஜா என்று ஆளுக்கு ஒரு மூளையில் நின்று திமுகவை டேமேஜ் செய்துகொண்டு இருந்தார்கள். இந்த விவகாரம் ஏற்கெனவே திமுக புள்ளிகள் மத்தியில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி இருந்தது. அதுவும் இல்லாமல் ராகுல் காந்தி தமிழகம் வரும்போதெல்லாம் கருணாநிதியை சந்திக்காமலே டெல்லி திரும்பியதும் திமுக.வினரிடம் புகைச்சலை ஏற்படுத்தி வந்தது.
ராகுல் ஒன்றும் குழந்தை இல்லையே! காங்கிரஸின் பொதுச் செயலாளர். இளைஞர் காங்கிரஸை பலப்படுத்திவரும் தலைவர். எதிர்கால காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர். அதற்கும் மேலாக நேர்மையான அரசியலை விரும்பும் இளைஞர் என்று எதிர்கட்சியினராலேயே பாராட்டப்படும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் ஒரு தலைவர்கள், கருணாநிதியை சந்திக்காமல் போவது ஒவ்வொரு முறையும் எதிர்பாராமலா நடந்திருக்கும். எல்லாமே திட்டமிட்ட காய் நகர்த்தல்கள்தான்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்காமலே இருப்பது காங்கிரஸ் வளர்ச்சிக்கு சரியான அறிகுறி இல்லை என்பது ராகுலின் அபிப்ராயம். அதன் பின்னணியில்தான் யுவராஜா, ஈ.வி.கே.எஸ். கார்த்திக் போன்ற தலைவர்கள் செயல்பட்டார்கள்.
ஒருபக்கம் ப.சிதம்பரம், தங்கபாலு, வாசன் என்று உறவாடிக்கொண்டே மறுபக்கம் எதிர்ப்பலைகளை ஒரு கோஷ்டி உருவாக்கிக் கொண்டு இருந்தது. இவை அனைத்தும் திட்டமிட்டே நடத்தப்பட்ட நாடகங்கள் என்பது இப்போதாவது தி.மு.க.வுக்கு விளங்கியிருக்குமா என்று தெரியவில்லை? இந்த நாடக அரங்கேற்றங்கள் எல்லாம் சோனியாவின் அனுமதியில்லாமலா நடந்தேறியிருக்கும்? எல்லாமே ஸ்பெக்ட்ரமால் வந்த வினைதான் என்று பத்திரிகை வட்டாரங்களில் கசப்பு வார்த்தைகள் உதிர்க்கிறார்கள்.
அரசியல் சாணக்கியர் கருணாநிதி எப்படி இந்தத் தேர்தலில் கோட்டை விட்டார்..? இல்லை, காங்கிரஸ் இல்லாமல் நின்றுதான் பார்ப்போமே என்ற மன தைரியமா? இல்லை துணை முதல்வர் பதவி பறிபோய்விடுமோ என்ற கவலையா? அல்லது ஸ்டாலின் முதல்வராவதற்கு தடைகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமா? எல்லாம் கேள்விகளாகவே இருக்கின்றன.
காங்கிரஸும் வேறு ஏதோ சூசகமான திட்டத்தோடுதான் இப்படி பிடிகொடுக்காமல் திமுகவிடம் நடந்துகொண்டதோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறார்கள் பலர்... அது என்ன திட்டமாக இருக்கும்? அரசியல் தெரிந்த சில விவரப் புள்ளிகள் கூறுவது இதுதான்:
அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் ஒரு முன்முயற்சியில்தான் திமுகவுடனான இடஒதுக்கீட்டுப் பேச்சுவார்த்தையில் அப்படி பிடிகொடுக்காமல் நடந்துகொண்டது. அதுவும் இல்லாமல், அடிக்கடி பொதுக்கூட்ட மேடைகளில் அதிமுக தலைவி ஜெயலலிதாவேறு காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார். அதேநேரத்தில் ஸ்பெக்ட்ரம், இலங்கைப் பிரச்னைகள் வேறு விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றன. விலைவாசி ஏற்றம், பெட்டோல் விலை உயர்வு போன்ற அடிப்படை பிரச்னைகள் வேறு தலைவிரித்து ஆடுகின்றன. இவை எல்லாப் பிரச்னைகளுக்கும் தானும் ஒரு காரணம் என்பது காங்கிரஸுக்குத் தெரியும். அதனால், மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்திருப்பதும் அந்தக் கட்சிக்கு தெரியும். ஆனால், திமுகவோடு சேர்ந்து போட்டியிட்டால் ஒரு இடம் கூட கிடைக்காமல், தமிழக அரசியல் வாழ்க்கையே சூனியமாகிவிடுமோ என்ற பயம் சில நாட்களாகவே ராகுலுக்கும் அவர் தொண்டர்களுக்கும் இருந்து வந்தது. அதனால், எப்படியாவது திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸை பிரிக்கவேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்களே பல நாட்களாக போராடி வந்தார்கள். அது இப்போது நடந்தேவிட்டது.
இன்னொன்றையும் சிலர் பேசிக்கொள்கிறார்கள்... தேமுதிகவை தனியாக அழைத்துக்கொண்டு தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராகிக்கொண்டு இருக்கிறது என்பதுதான் அது. ஆனால், அதற்கான மேகமூட்டம் எல்லாம் கலைந்து பல மணி நேரங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், அரசியல் வானில் எப்போது என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?
- சா.இலாகுபாரதி
டாப் 10 பெண்கள் 2010
Posted by Gunalan Lavanyan
7:18 PM, under கட்டுரை | No comments
1
ஆங் சான் சூ கி

1945-ல் மியான்மர் விடுதலைப் போராட்டத் தலைவரான ஜெனரல் ஆங் சான் கின் கி தம்பதியருக்குப் பிறந்தவர் ஆங் சான் சூ கி. படிக்க பிரிட்டன் சென்று அங்கேயே மிக்கேல் ஆரிஸ் என்பவரை மணம் முடித்துக் கொண்டார். மியான் மரில் 1962-லிருந்து ராணுவ ஆட்சி நடந்து வந்தது. 1988இ-ல் குடும்பச் சூழல் காரணமாக நாடு திரும்பிய சூகி, நாடு முழுவதும் இருந்த ராணுவ ஆட்சிக்கு எதிரான கொந்தளிப்பைக் கண்டு, ‘தேசிய ஜனநாயக லீக்’ கட்சியைத் துவங்கினார். ராணுவ ஆட்சிக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தினார். இதனால், மக்களிடம் சூகியின் செல்வாக்கு மளமளவென உயரத் தொடங்கியது.
இதை எதிர்பாராத ராணுவ அரசு, பாதுகாப்பு காரணம் எனச் சொல்லி, 1989ஆம் ஆண்டு சூகியை வீட்டுச் சிறையில் அடைத்தது. இது 1995ஆம் ஆண்டு வரை நீடித்தது. இடையில் சில காலம் விடுவிக்கப்பட்டு, மீண்டும் வீட்டுச் சிறையில் தள்ளப்பட்டார் சூ கி. பல நாடுகளின் வற்புறுத்தலாலும், ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலக அமைப்புகளாலும் கண்டனத்துக்கு உள்ளான மியான்மர் ராணுவ அரசு, 2010 நவம்பர் மாதம் சூ கியை விடுவித்தது. கடந்த 21 ஆண்டுகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுச்சிறையிலேயே காலத்தைக் கழித்திருக்கும் சூ கி, 65 வயதிலும் போராட்ட குணம் மாறாமல் தனது அடுத்தகட்ட அரசியல் யுத்தத்தைத் தொடங்கியிருக்கிறார். ராணுவ ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து போர்க்குரல் எழுப்பிவரும் சூ கி, மியான்மர் நாட்டு மக்களின் நம்பிக்கைச் சூரியன்!
2
ஓப்ரா வின்ஃப்ரே
அமெரிக்க சேனல் ஒன்றில் ‘ஓப்ரா வின்ஃப்ரே ஷோ’ என்ற பெயரில் டாக் ஷோ நடத்தி வருகிறார் வின்ஃப்ரே. உலகம் முழுவதும் 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் மக்கள் இந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள். இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைய இருக் கும் இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. டாக் ஷோ தவிர பத்திரிகை, இணைய தளம், நிகழ்ச்சி தயாரிப்பு, நடிப்பு என்று மீடியாவின் அத்தனை முகங்களையும் கொண்ட வின்ஃப்ரேவின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? 11 இலக்கம். அதாவது, ஆயிரத்து நானூறு கோடி. இதன்மூலம் உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் பெண் என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கும் வின்ஃப்ரே, ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர். ஒரு காலத்தில் உலகின் ஒரே கறுப்பின பில்லியனர் என்ற அந்தஸ்தையும் இவர் பெற்றிருந்தார். இப்போது ‘ஒன்’ என்ற பெயரில் டி.வி. சானல் ஒன்றையும் தொடங்குகிறவர், ‘நாட்டின் செல்வாக்கு நிறைந்த பெண்மணி’ என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் பாராட்டப் பெற்றவர்.
இவ்வளவு செல்வாக்குப் பெற்றிருக்கும் வின்ஃப்ரேவின் இளமைக்காலம் கொடுமையானது. தன் ஒன்பதாவது வயதிலேயே பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி, ஒரு குழந்தை பிறந்து அதை மரணத்துக்கு பலிகொடுத்தவர். வறுமைமிக்க கறுப்பினக் குடும்பத்தில் பிறந்து, துயரம் நிறைந்த இளமைப் பருவத்தைக் கடந்து, உலகின் சக்திவாய்ந்த பெண்ணாக விஸ்வரூபம் எடுத்து நிற்கும் வின்ஃப்ரே, ‘வாழ்வில் வெற்றி பெறுவது பெரிய ரகசியம் ஒன்றும் இல்லை. அயராமல் உழைக்கத் தயார் என்றால் எந்த உயரத்தையும் எட்டலாம்’ என்று கூறுகிறார். தான் நடத்தும் பத்திரிகை, இணையதளம் மூலம் வரும் வருமானத்தின் ஒரு பகுதியை ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக ஒதுக்குவதில் வெளிப்படுகிறது ஓப்ராவின் மனிதநேயம்.
3
சாய்னா நெஹ்வால்

சாய்னா நெஹ்வாலைப் போல ஒரு பெண், இந்திய பேட்மிட்டன் உலகில் இனி பிறக்க வேண்டும். வந்த வேகத் தில் திரும்பிவிடாமல், நின்று அடித்துக் கொண்டு இருப்பவர். ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருது பெற்ற முதல் பெண் பேட்மிட்டன் பிளேயர் என்ற அந்தஸ்துக்குச் சொந்தக்காரர். சாய்னா ஒரு போட்டியில் பங்கேற்றால் வெண் கலத்தையாவது வாங்காமல் திரும்ப மாட்டார் என்கிற அளவுக்கு அவரு டைய ஹிட்-லிஸ்ட் இருக்கிறது. குறைந்த வயதில், விளையாட வந்த சிறிய கால இடைவெளிகளுக்குள் உலகத் தர வரிசையில் முன்னுக்கு வந்தவர்.
பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தபோது, யோசிக்காமல் மறுத்துவிட்டவர், விளம் பரத்துறையில் கால் பதித்துவிட்டார். விளம்பரத்தில் நடிப்பதற்கு கிரிக்கெட் ப்ளேயர்கள், சினிமா நடிகர்கள் வாங்கும் சம்பளத்தைக் காட்டிலும் சாய்னா கூடுதலாக வாங்குகிறார். இப்படி அதிகப்படியான சம்பளத்தோடு விளம்பரத்தில் நடித்தாலும், தன்னுடைய விளையாட்டில் கோட்டைவிட்டது இல்லை என்பது சாய்னாவின் மிகப் பெரிய ப்ளஸ்!
4
ஆயிஷா
ஆயிஷாவை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்கமுடியாது. அமெரிக்காவின் டைம் பத்திரிகையில் செய்தி வெளியானதும் உலகில் உள்ள பெண்கள் அமைப்புகள் அத்தனையும் ஒரு நிமிடம் வாயடைத்துதான் போயின. அந்த அளவுக்கு வன் கொடுமைக்கும், பாலியல் துன்புறுத் தலுக்கும் ஆளாகி, உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆயிஷா. காதுகளும் மூக்கும் துண்டிக் கப்பட்ட இந்த ஆயிஷா, பணத்தாசை பிடித்த ஒரு தந்தைக்கு ஆப்கானிஸ்தானில் பிறந்தவர். தன் அப்பாவின் பணவெறியால் தாலிபான் தீவிரவாதிக்கு கழுத்தை நீட்ட விற்கப்பட்டார். அதன்பிறகு நடந்ததெல்லாம் மீடியாவால் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. குண்டுவைப்பது, ஊரை எரிப்பது எனக் கொடூரங்களை அரங்கேற்றும் தாலி பான்களின் இந்தத் தீவிரவாதம் இன்று ஒரு பெண்ணின் காது, மூக்குவரை நீண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
ஆயிஷாவின் இந்தச் சோகம் டைம் பத்திரிகையில் கவர் ஸ்டோரியாக வந்தபிறகு அவருக்கு உலகெங்கிலும் இருந்து ஆதரவு குரல்கள் ஒலித்தன. அமெரிக்கா சென்று மூக்கில் அறுவை சிகிச்சை செய்து திரும்பியிருக்கிறார் ஆயிஷா. ‘எனக்கு ஏற்பட்ட காயம் இன்று ஆறினாலும் அதன் வடுக்கள் மட்டும் வலிகளை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கின்றன’ என்கிறார் ஆயிஷா. பாதுகாப்பு அரண்களாக இருக்க வேண்டியவர்களாலேயே வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ஆயிஷாவின் வாழ்க்கையில் நடந்திருக்கிற இந்தக் கொடு மைகள் மிகப் பெரும் துயரச் சம்பவம்.
5
அருந்ததி ராய்

“மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா காடுகளில் உள்ள பாக்ஸைட் கனிம வளங்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பதற்காக, அங்கு வசிக்கும் பூர்வப் பழங்குடி மக்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது மத்திய அரசு. இதை எதிர்த்து போராட்டக் களத்தில் குதித்த மக்கள் மீது ‘சல்வா ஜூடும்’ என்ற கூலிப்படையை ஏவித் தொடர் தாக்கு தல் நடத்தி வருகிறது. இதனால், சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலைக்கு தண்டகாரண்யா பழங்குடி மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்” என்பது மத்திய அரசு மீதான அருந்ததி ராயின் குற்றச்சாட்டு. பழங்குடிகளுக்கு ஆதரவாக மாவோயிஸ்டுகளும் களத்தில் இறங்கி போராடி வருகிறார்கள். இந்நிலையில்தான் அந்தக் காடுகளில் நடக்கும் உண்மைச் சம்பவத்தை அறிந்து வந்திருக்கும் அருந்ததி ராயை, ‘மாவோயிஸ்ட்’ என்று ஒரு சாரார் முத்திரை குத்தியிருக்கிறார்கள். மத்திய அரசும், அரசுக்கு
எதிராகச் செயல்படுவதாகச் சொல்லி, சட்ட ரீதியான நடவடிக்கைகளை அவர் மீது ஏவி வருகிறது.
ஆனால், இவை எதற்கும் அசராமல் தொடர்ந்து பழங்குடிகளுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு எதிராகவும் போராடிவரும் அருந்ததிராய், ‘நாட்டில் எமர்ஜென்சி நிலை பல வருடங்களுக்கு முன்புதான் இருந்தது என்று இல்லை. உண்மையில் இப்போதுதான் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமலில் இருக்கிறது’ என்கிறார். அரசுக்குப் பெரும் தலைவலியாக இருந்தாலும், பழங்குடி மக்களின் தலைவலிக்கு அருமருந்தாக இருப்பதும் அருந்ததி ராய்தான்.
6
ஏஞ்சலினா ஜூலி
உலக அளவில் மிகவும் அழகான பெண்கள் வரிசையில் தவறாமல் இடம் பிடித்துவிடுவார் ஏஞ்சலினா ஜூலி. ஜூலியின் ஆறு குழந்தைகளில் மூன்று தத்துப் பிள்ளைகள். ஜூலியின் ஒரே கவலை அவர்களோடு நேரத்தை செல விட முடியவில்லை என்பதுதான். அதனால் எதிர்காலத்தில் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு, ஆப்பிரிக்கா வில் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதே இவரது கனவு. ‘மூன்று குழந்தை பெற்றபிறகும் ஸ்லிம் அண்ட் ட்ரிம்மாக இருக்கிறார்’ என்கிறார்கள் அவருடைய ரசிக மகா ஜனங்கள்.
அழகோடு அற்புதமான நடிப்பும் கைவரப்பெற்ற ஜூலி, அந்தத் திறமைக்குப் பரிசாக ஏகப்பட்ட விருதுகளை வென்றிருக்கிறார். ஆஸ்கர், கோல்டன் குளோப் அவார்ட் உள்ளிட்ட உலகின் முக்கியமான பல விருதுகளைப் பெற்றிருக்கும் ஜூலி, ‘தன் கண்களிலும், உதடுகளிலும்தான் ஒட்டுமொத்த அழகையும் ஒளித்து வைத்திருக்கிறார்’ என்பது பலரது கருத்து. அந்த அழகுக்கு சவால்விடும் வகையில், ஏற்கெனவே எலிசபெத் டெய்லர் நடித்த ‘கிளியோபாட்ரா’ படத்தின் ரீ-மேக்கில் இப்போது ஜொலிக்கப்போகிறார் ஜூலி. ஹாலிவுட்டின் அட்ராக்டிவ் நட்சத்திரமான ஜூலியின் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக ரித்துக்கொண்டே போகிறதாம்.
7
நீரா ராடியா
டெல்லிவாலாக்கள் இப்போது நீரா ராடியாவின் பெயரைக் கேட்டாலே அதிர்ச்சி அடைகிறார்கள். ‘வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்திவரும் ராடியா, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இடைத் தரகராக இருந்து காய்களை நகர்த்தி யவர். 2ஜி விவகாரம் தொடர் பாக டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா மற்றும் முன்னாள் அமைச்சர் ராசா உள்ளிட் டோருக்கு இடையே இவர் பாலமாக செயல்பட்டதற்கு வலுவான ஆதாரங் கள் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இவருக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான பலருடனும் தொடர்பு இருப்பதும் தெரியவந்ததுடன் இவரது தொலைபேசி ஆடியோ பதிவுகள் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்தப் பரபரப்புகள் அடங்குவதற்குள் அடுத் தடுத்து இரண்டு முறை இவருக்கு சொந்தமான நிறுவனம், வீடு, வங்கிக் கணக்குகள் என்று ஒவ்வொன்றையும் சல்லடையாக சலிக்கத் தொடங்கியது சி.பி.ஐ. இவருக்கு எதிராகக் கிடைத்திருக்கும் ஆதாரங்கள் அத்தனையும் நீதி மன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் இன்னும் எத்தனை தலைகள் உருளுமோ என்கிற பயத்தில் டெல்லி வட்டாரம் உறைந்துபோய் இருக்கிறது. (நம் தோழியில் டாப் 10 பெண்கள் பற்றி எழுதும்போது ஆ.ராசா கைது செய்யப்படவில்லை!)
8
சானியா மிர்ஸா
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் விளை யாட்டுப் போட்டியில் இந்தியாவில் இருந்து கலந்துகொண்ட முதல் பெண் சானியா. கவர்ச்சியும் அதிரடியும் கலந்த சானியாவின் சர்வீஸ்களுக்கு இந்தியாவில் இன்று ரசிகர் பட்டாளம் ஏராளம். ஒரு காலத்தில் ஆண்கள் மட் டுமே ஆதிக்கம் செலுத்திவந்த இந்திய டென்னிஸ் உலகில் சானியாவின் வரு கைக்குப் பிறகுதான் நிறைய மாற்றங் களும் முன்னேற்றங்களும் நடந்திருக் கின்றன. சானியா முதலடி எடுத்து வைத்த 2003ஆ-ம் ஆண்டில் டென்னிஸ் விளையாட்டைவிட அவர் உடுத்திய ஆடைகள் மீதுதான் பார்வையாளர்களின் கவனம் இருந்தது. இதுவே சானியா மீது பலரை வார்த்தை குண்டு வீசவைத்தது. ‘அவரை மதத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டும்’ என்று அவர் சார்ந்த மதத் தலைவர்கள் விமர்சனம் வைத்தார்கள். அதேபோல, கடந்த ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக்குடன் அவருக்கு நடந்த திருமணத்துக்கும் ஏகப்பட்ட நெருக்கடிகள், கெடுபிடிகள். உணர்ச்சிவசப்பட்டு சிலர் அவரை நாடுகடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். சிலர் அவருடைய திருமணத்தை நடக்கவிட மாட்டோம் என்று எச்சரிக்கை செய்யும் தொனியில் பேசினார்கள். ஆனால், இப்படிப்பட்ட எந்த விமர்சனங்களுக்கும் மிரட்டல்களுக்கும் அவர் அஞ்ச வில்லை. எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து தொடர்ந்து இந்தியாவுக்காக டென்னிஸ் விளையாடி வரும் சானியா, பாகிஸ்தான் மருமகளாக இருந்தாலும், தான் எப்போதும் இந்தியாவின் மகள் என்பதை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறார். இந்திய டென்னிஸ் வானில் சானியா மிர்ஸா சில்வர் ஸ்டார்.
9
லதிகா சரண்
தமிழ்நாடின் முதல் பெண் டிஜிபி லத்திகா சரண். இந்த அந்தஸ்தும் பதவி யும் இவரைத் தானாகத் தேடிவந்தது. ‘டிஜிபி பொறுப்புக்கு இவரைவிட சீனியர்கள் இருக்கும்போது இவரை ஏன் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கிறீர்கள்’ என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது, அதற்குத் தகுந்த பதில் அளித்து விட்டு, தன்னுடைய நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாகவே இருந்தது. இவரது நியமனம் குறித்துப் பல விமர்சனங்கள், வழக்குகள், கேள்விகள் எழுந்தபோதும் லத்திகா வாய்திறக்கவில்லை. இதுதான் அவரது அணுகுமுறை. அரசும் இப்படிப்பட்டவரைத்தான் எதிர்பார்க்கிறது. குடைச்சல் இல்லாமல் சுமுகமாக அரசு இயந்திரத்தை இயக்க வேண்டும் என்றால், லத்திகா சரண்தான் சரியான சாய்ஸ் என்று தீர்மானித்துத்தான் அவரைப் பதவியில் அமரவைத்தி ருப்பார்கள். எப்படி இருப்பினும் நெளிவு சுளிவு கொண்ட நாசூக்கான ஓர் உயர் அதிகாரி தமிழகக் காவல் துறைக்கு நிச்சயம் தேவை. அந்த இடத்தை நிரப்புவதில் லத்திகா சரண் முன்னணி வகிக்கிறார்.
சல்யூட் மேடம்!
10
இரோம் ஷர்மிளா
1958இல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ‘ஆயுதப் படைச் சிறப்புச் சட்ட’த்தை திரும்பப் பெறவேண்டும் என்று தொடர் பட்டினிப் போராட்டம் நடத்திவருபவர் இரோம் ஷர்மிளா. இச்சட்டம் ராணுவ வீரர்களுக்கு கட்டுப் பாடற்ற அதிகாரத்தை வழங்குகிறது.
2000இல் ஆயுதப் படைக் குழுவினர் மீது தாக்குதல் நடத்துவதாகச் சொல்லி பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டு இருந்த அப்பாவி மக்கள் 10 பேரை சுட்டுக் கொன்றது ராணுவம். கண்மூடித் தனமான இந்தத் தாக்குதலுக்குக் காரணமான ஆயுதப்படைச் சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெறுவது ஒன்றே, மீண்டும் இதுபோல் நடக்காமல் தடுக்க ஒரேவழி என்று கூறி, தன் பட்டினிப் போராட்டத்தை அறிவித்தார் ஷர்மிளா. அந்தச் சட்டம் இன்றுவரை வாபஸ் பெறப்படவில்லை. ஷர்மிளாவின் போராட்டமும் ஓய வில்லை.
- சா.இலாகுபாரதி
நம்தோழி, ஜனவரி - 2011
25 February 2011
பட்டுப்புடவை, மல்லிகை, பொன்நகை ப்ளஸ் புன்னகை
Posted by Gunalan Lavanyan
7:27 AM, under பேட்டி | No comments
’ஐயய்யோ பிடிச்சிருக்கு’ என்ற தன் பாட்டின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த மஹதி, சினிமா, கர்நாடக இசை மேடை ஆகிய இரண்டிலும் பிசியாக இருக்கிறார். சங்கீதக் குடும்பத்தைச் சேர்ந்த மஹதியை சந்தித்தபோது நல்ல மழை. ‘மஹதி அகாடமி ஆஃப் மியூஸிக் அண்ட் டான்ஸ்’ பள்ளியில் நடந்தது இந்த மழை நாள் சந்திப்பு.
‘‘நாங்க இசைக் குடும்பம். அப்பா – திருவையாறு சேகர். பாடகர்; இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் சிஷ்யர். அம்மா, புல்லாங்குழல் வித்வான் வசந்தி. புல்லாங்குழல் வித்வம்சினி திருமதி கேசியின் சிஷ்யை. அப்பா, அம்மா சேர்ந்துதான் இந்த அகாடமியை நடத்திட்டு இருக்காங்க. இது ஆரம்பிச்சு ஏழு வருஷம் ஆகுது. இங்கே, 600 ஸ்டூடன்ட்ஸுக்கு மேலே மியூஸிக் கத்துக்குறாங்க. பாட்டு, வீணை, வயலின், கிடார், ஃப்ளூட், மிருதங்கம்னு எல்லாமே சொல்லித் தர்றாங்க. என் பெயர்லே அகாடமி நடக்கிறதாலே அப்பப்போ ஸ்கூல்லே என்ன நடக்குதுன்னு அம்மாகிட்டே தகவல் கேட்டுப்பேன். மத்தபடி எல்லாத்தையும் அப்பா – அம்மாதான் கவனிச்சிக்கிறாங்க. நான் கச்சேரி, ரெக்கார்டிங்னு பிஸி ஷெட்யூல்லே இருப்பேன்.
இதோ ‘வந்தேன்... வந்தேன்’னு டிசம்பர் வந்துடுச்சு. மியூஸிக் ஃபெஸ்டிவெல் தொடங்கப்போகுது. அந்த மூடுலே இருக்கேன். அதே மூடுலே இருந்தாகணும். அப்பதான் எனக்கு ஃபெஸ்டிவெல் நல்லா போகும். என் கச்சேரிகள் நல்லா நடக்கணும்னா, யூஸிக் தவிர, மத்த எல்லாத்தையும் நான் மறந்தாகணும். சில நேரங்கள்லே டிசம்பர் சீஸன்லே நிறைய ரெக்கார்டிங்கும் வந்துடும். அதுக்கும் போயாகணும். டைம் மேனேஜ்மென்ட் தெரிஞ்சிருக்கிறது இதையெல்லாம் சமாளிக்க ரொம்ப சௌகரியமா இருக்கு. அந்த மாதிரி சமயங்கள்லே அம்மா, அப்பாவைக்கூடக் கண்டுக்கமாட்டேன். ஆனா, அவங்க எனக்கு உதவியா இருப்பாங்க. இப்ப கணவர் வ ந் து ட் டா ர் . அவ ரு ம் அப்பா, அம்மா மாதிரியே இருக்கார். வாழ்க்கை ரொம்ப ச ந் தோஷமா அமைஞ்சிருக்கு. கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.
ஒவ்வொரு வருஷமும் டிசம்பர் சீஸன்லே பதினஞ்சு கச்சேரியாவது பண்ணுவேன். போனவருஷம் பாடுன கீர்த்தனைகளை இந்த வருஷம் பாடமாட்டேன். சீஸன்லே ஒவ்வொரு கச்சேரிக்கும் வெவ்வேறு கீர்த்தனைகளை பி ரி ப் பே ர் ப ண் ணி வெச்சுக்குவேன். ராகத்துலே பு து சா கண்டு பி டி க் க எதுவும் இல்லே! அதனாலே, அபூர்வ ராகங்களாப் பார்த்து செலக்ட் பண்ணி வெச்சிருப்பேன். என்னோட கச்சேரியிலே எட்டு, ஒண்பது அயிட்டமாவது இருக்கும். இதையெல்லாம் ஒரு ரூலாவே கடைப்பிடிக்கிறேன். இந்த ரூல்ஸ்படிதான் இந்த சீஸனையும் தொடங்கப் போறேன். ஆனா, இந்த வருஷம் என்னோட ஒரு கச்சேரியிலே டபுள் ராகா - பல்லவி பாடுறதுக்கு ஸ்பெஷல் பிரிபரேஷன்ஸ் பண்ணி வெச்சிருக்கேன். அதேமாதிரி தமிழ்க் கீர்த்தனைகளையும் நிறைய பாடப்போறேன். அம்மாவும் நிறைய ஐடியாஸ் கொடுத்துருக்காங்க. அதையும் எப்படி பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்.
எப்பவும் சீஸன் ஆடியன்ஸ், எல்லா கச்சேரிக்கும் வருவாங்க. அதனாலே ஒவ்வொரு கச்சேரியும் வித்தியாசமாவும் புதுசாவும் இருக்கணும்னு அவங்க எதிர்பார்ப்பாங்க. அதை நிறைவேத்துறது கச்சேரி செய்றவங்களோட கடமை. என் கடமையை நான் எப்பவும் சரியா செய்ய முயற்சி பண்றேன். அதுக்கு என்னோட ரோல் மாடலா இருக்கிற குரு, மதுரை டி.என். சேஷகோபாலன் அவர்களும் ஒரு காரணம். அதேமாதிரி கேரளாவில் இருக்கிற குரு, மங்காட்டு நடேசன் அவர்களும். இவங்க, என் இசைப் பயணத்துக்கு கிடைத்த நல்ல வழிகாட்டிகள்! (மஹதியின் முதல் குரு அவருடைய மாதாவும்
பிதாவும்தான்.)
சீஸன்லே மியூஸிக் பிரிபரேஷன் எப்படியோ, அப்படிதான் என் காஸ்ட்யூமும்! டிசம்பர்னா பட்டு நிச்சயம் உண்டு. மத்த சேலைகளுக்கு இப்ப வேலையே இல்லை. பட்டுப் புடவையோடு மல்லிகை, பொன்நகை ப்ளஸ் புன்னகை அவசியம்
இருக்கணும். இருக்கிற மாதிரி பார்த்துப்பேன். போன வருஷம் கட்டுன சேலையை இந்த வருஷம் கட்டமாட்டேன். இந்த வருஷம் கட்டுன சேலை அடுத்த வருஷம், நோ சான்ஸ். இதையெல்லாம் வியூவர்ஸ் (பெண்கள்) கண்கொட்டாமே கவனிக்கிறாங்க! அதனாலே சீஸனுக்கு பிரிப்பேர் ஆகும்போது சின்னச் சின்ன விஷயத்தைக்கூட பார்த்துப் பார்த்து செய்ய வேண்டியிருக்கு.
இன்னொரு முக்கியமான ச ங் கதி! ச ங் கீ த சீஸன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி சாரீரத்தை கவனிச்சுக்கணும். என்னோடது சென்சிடிவான வாய்ஸ்ங்கிறதாலே யார் கிட்டேயும் அநாவசியமா பேசமாட்டேன். வாய்ஸ் ரெஸ்ட் கொடுப்பேன். போன்லேயும் அதிகமா பேசமாட்டேன். மேக்ஸிமம் எஸ்.எம்.எஸ்.தான்! அதே நேரத்துலே சரீரத்துக்கும் எதுவும் வந்துடக் கூடாது. அதனாலே ஹாட் வாட்டர், ட ய ட்னு இ ரு ப்பேன். ‘சங்கீதத்துக்கு சாரீரமும் மு க் கி ய ம் , ச ரீ ர மு ம் முக்கியம்’னு அப்பா சொல்லுவாங்க. அதை எப்பவும் ஃபாலோ பண்றேன். (தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை!)
இப்ப இருக்கிறமாதிரி நான் பாட வரும்போது நிறைய வாய்ப்புகள் இல்லை. எங்காச்சும் ஒண்ணு, ரெண்டு வாய்ப்பு கிடைக்கும். ஏதாவது டி.வி. சானல்லே மியூசிக் புரோக்ராம் பண்ணுவாங்க. அந்த புரோக்ராம்லே கலந்துக்க ரொம்ப பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். சில நேரங்கள்லே என்னதான் திறமை இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கிறது குதிரைக் கொம்பா இருக்கும். ஆனா, இப்ப அப்படி இல்லே! (காலம் மாறிப்போச்சு!) திறமை வெளியே வர்றதுக்கு நிறைய வழி இருக்கு. ஒவ்வொரு சீஸனுக்கும் புதுசு புதுசா ஆர்டிஸ்ட் வர்றாங்க. பத்து, பன்னிரெண்டு வயசுலேயே ரொம்ப ஃபேமஸ் ஆயிடுறாங்க. விஜய் டி.வி. மாதிரி நிறை சானல்ஸ் அவங்களுக்கு ‘ஏர் டெல் சூப்பர் சிங்கர்’ மாதிரி புரோக்ராம்லே வாய்ப்பு கொடுக்கறாங்க. அவங்களே வீடு தேடி வந்து அழைச்சிட்டு போறாங்க. கூடவே கிஃப்ட், சினிமா சான்ஸ்னு நிறைய கிடைக்குது.
இந்தமாதிரி நேரத்துலே இவங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். ரொம்ப கடுமையா உழைக் கணும். வெற்றி கிடைச்சிடுச்சுங்கிறதாலே இதுவே முடிவுன்னு நினைச்சிடக்கூடாது. இதைவிட சாதிக்க இன்னும் நிறைய இருக்குங்கிற உண்மையை தெரிஞ்சுக்கணும். இந்த நேரத்துலே குருவோட வழிகாட்டுதல்படி நடக்குறது ரொம்ப முக்கியம்.
இன்னும் முக்கியமான விஷயம், கர்வம் வெச்சிக்கக் கூடாது. இதெல்லாம் என் அப்பா சொல்லிக் கொடுத்த பாடம். இதை என் ஜூனியர்ஸுக்கு சொல்றது என் கடமை. அதனாலே, கர்வம் வேணாம், புகழுக்கு மயங்கவேணாம், குரு பக்தி தேவை. இதெல்லாம் இருந்தா இன்னும் இன்னும் சாதிக்க முடியும். இசைச் சிகரத்தை அடையமுடியும்.’’
- சா.இலாகுபாரதி
நம் தோழி, டிசம்பர் 2010




















