12 April 2011

விண்வெளி வீரர் யூரி கெகாரின்

Posted by Gunalan Lavanyan 11:20 PM, under | 1 comment


ரஷ்ய விண்வெளி வீரர் யூரி கெகாரின் விண்வெளியில் கால் பதித்து இன்றோடு (2011 ஏப்ரல் 12) 50 ஆண்டுகள் ஆகின்றன. இதேநாள் 1961ஆம் ஆண்டு யூரி கெகாரின் விண்வெளியில் கால் பதித்து சாதனைப் படைத்தார். விண்வெளிக்குச் சென்றுவந்த முதல் மனிதன் யூரி கெகாரிதான்.

யூரி கெகாரின்


கெகாரின் விண்வெளியில் கால் பதித்து இன்றோட 50 ஆண்டுகள் நிறை வடைவதை ரஷ்யா ஆரவாரத்தோடு கொண்டாடிவருகிறது. 

1961க்கு முன்புவரை மனிதர்கள் யாரும் விண்வெளிக்கு சென்றதில்லை. ரஷ்யாதான் முதன் முறையாக இந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டியது. ரஷ்யாவின் சாதனையைப் பார்த்து அமெரிக்கா வாய்மேல் விரல் வைத்து வேடிக்கைப் பார்த்தது. விண்வெளிக்கு சென்றது மட்டும் இல்லாமல், பூமியையும் சுற்றி வந்து யூரி கெகாரின் சாதனைப் படைத்தார்.

கடந்த 50 ஆண்டுகளில் 500க்கும் அதிகமான விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குச் சென்று திரும்பியிருந்தாலும்,இதற்கெல்லாம் முன்னோடியாக கெகாரினின் விண்வெளிப் பயணத்தை, ரஷ்யா கொண்டாடி வருகிறது. கிரம்லின் மாளிகையில் ஐம்பது துப்பாக்கி வேட்டுச்சத்தங்களுடன் இந்த நாள் நினைவு கூறப்பட்டது.

இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருக்கும் வானியலாளர்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பேசிய ரஷ்ய அதிபர் டிமித்ரி மெத்வதேவ், விண்வெளி ஆராய்ச்சி என்பது ரஷ்யாவின் முன்னணி இலக்குகளில் ஒன்றாகத் திகழ்வதாக தெரிவித்தார். இதற்கு தேவைப்படும் நிதி ஒதுக்கீடுகளை ரஷ்யா செய்யும் என்றும் கூறினார்.

கெகாரின் தன்னந்தனியாக ஒற்றையடிப்பாதையில் மேற்கொண்ட விண்வெளிப் பயணம் இன்று பலருக்கும் நெடுஞ்சாலையை அமைத்துக் கொடுத்திருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சியில் கெகாரின் ஒரு மைல்கல்.

11 April 2011

சிந்திப்பீர்! செயல்படுவீர்!

Posted by Gunalan Lavanyan 7:15 PM, under | 1 comment


ஏப்ரல் 13: தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப்போகிற தினம். நம்மை ஆளப்போகிறவரை தேர்ந்தெடுக்கிற நாள். யாரைத் தேர்ந்தெடுத்தால் மக்கள் பிரச்னைகள் தீரும் என்று தீர்மானிக்கக் கூடிய நிலையில் தமிழக அரசியல் நிலை இல்லை. ஒருத்தர் அயோகியன் என்றால், இன்னொருத்தர் பரம அயோகியனாக இருக்கிறார். அதனால், பரம அயோக்கியனைவிட அயோகி யனை தேர்ந்தெடுப்பதே மேல் என்ற முடிவை எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.



நம்முடைய வரிப்பணத்தை அரசுக்கு செலுத்துகிறோம். நம்முடைய வரிப் பணத்தில் இருந்துதான் தேர்தல் நடக்கிறது; அரசியல்வாதிகளின் கொள்ளை நடக்கிறது. நம்முடைய வரியிலிருந்துதான் நமக்கு வேண்டிய தேவைகளை அரசு நிறைவேற்றுகிறது.சில அரசியல்வாதிகள் அவர்களுடைய தேவை களையும் நமது வரி பணத்திலிருந்தே நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ஆகவே நம்முடைய பணத்தை செலவழிக்கிற அதிகாரத்தை வேறொருவரிடம் கொடுக் கப்போகிற தினம் ஏப்ரல் 13.

ஒருநாள் இன்பத்துக்காக அரசியல் தரகர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு, 5 ஆண்டு காலம் அல்லல்பட வேண்டாம்.


  • கடந்த காலங்களில் யார் மக்களுக்கு நன்மை செய்திருக்கிறார்கள்?
  • யார் மக்களுக்கு தீங்கு விளைவித்து இருக்கி றார்கள்?
  • யார் மக்களை பிச்சையெடுக்க வைத்திருக்கிறார்கள்?
  • விலைவாசி பிரச்னைகளுக்கு யார் காரணம்?
  • பெட்ரோல் விலை உயர்வுக்கு யார் காரணம்?
  • இலங்கைத் தமிழர் படுகொலைகளுக்கு யார் காரணம்?
  • ரௌடிகள் அட்டகாசத்துக்கு யார் காரணம்?
  • எல்லா துறைகளிலும் மக்களைச் சுரண்டும் ஆட்சி யாருடைய ஆட்சி?
  •  நடிகர்களை காட்டி மக்களை ஏமாற்றி வருகிறவர்கள் யார்?
  • எந்த அரசியல் தலைவர் சிறந்த நடிகராக மக்களை ஏமாற்றுகிறார்?
  • எந்த நடிகர் சிறந்த அரசியல் தலைவராக இருந்து மக்களுக்கு சேவை ஆற்றுவார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
இப்படி பல்வேறு கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொண்டு பதில் தேடுங்கள். அப்போது, எந்த ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தெரியும்.

ஏப்ரல் 13 உங்கள் தலையெழுத்தை நீங்களே நிர்ணயிக்கும் நாள்!

நம்மை ஆளப்போகிறவரை தேர்ந்தெடுப்பது நம் உரிமை! வாக்களிப்பது நம் கடமை!

சிந்திப்பீர்! செயல்படுவீர்!

விஜய் - விக்ரம் - கலக்கப்போவது யாரு?

Posted by Gunalan Lavanyan 6:02 PM, under | No comments


ராவணன் படத்துக்குப் பிறகு விக்ரம் வித்தியாசமான வேடத்தில் கலக்கும் படம் தெய்வத் திருமகன். மதராசப்பட்டினம் படத்தின் இயக்குனர் விஜய்தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். வழக்கம்போலவே விஜய் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்.

அனுஷ்கா, அமலாபால் என்று டாப் ஹீரோயின்கள் இணைந்திருக்கிறார்கள். இவர்களோடு நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்தி இருக்கிறார்கள். விஜய்+விக்ரம் காம்பினேஷன் ஒர்க்கவுட் ஆகும் என்று எதிர்பார்க்கலாம். காரணம் படத்தில் விக்ரம் சின்ன பையனாக பின்னியெடுத்திருக்கிறாராம்!

படத்தின் ட்ரைலரை கூட அதே உத்தியில்தான் எடுத்திருக்கிறார்கள். டிரைலரை பார்க்கும்போதே படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது என்றால் படத்துக்கு எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. விஜய் + விக்ரம் கூட்டணி கலக்கல் கூட்டணியாக அமையும் என்று நம்பலாம்.

இந்தப் படத்தின் சில காட்சிகள்...










பொன்னர் சங்கர்

Posted by Gunalan Lavanyan 12:02 AM, under | No comments

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரஷாந்த நடித்திருக்கும் படம் பொன்னர் சங்கர். படத்தில் இருவேடங்கள் ஏற்று நடித்திருக்கிறார் பிரஷாந்த். இயக்கம் தயாரிப்பு இரண்டுமே தியாகராஜன். கதை, வசனம் கலைஞர் கருணாநிதி. குங்குமத்தில் தொடராக வந்த கதைதான் இப்போது படமாகியிருக்கிறது. நீண்ட நாட்களாக எடுத்துவந்த இந்தப் படம் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டி ருக்கிறது. பிரஷாந்த் தவிர, பெரிய நடிகர் பட்டாளமே இந்தப் படத்தில் இருக்கிறது. குஷ்பு, சினேகா, ராஜ்கிரண், ஜெயராம், பொன்வண்ணன் என்று அந்தப் பட்டியல் நீள்கிறது. அந்தப் படத்தின் சில காட்சிகள்...























06 April 2011

பதவியிலிருந்து கேப்டன் விலகல்

Posted by Gunalan Lavanyan 8:23 AM, under | No comments


இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் அதிரடி ஆட்டக்காரர் சங்ககாரா விலகினார்.  உலகக் கோப்பை போட்டியில் இந்தியா விடம் தோல்வியடைந்ததையடுத்து, சங்ககாரா கேப்டன் விலகிக் கொண்டார்.

sangakara


ஜெயவர்தனேவுக்குப் பிறகு 2009இல் கேப்டன் பொறுப்புக்கு வந்த சங்ககரா (33) செய்தியாளர்களிடம் இதுபற்றி பேசினார்:

”இரண்டு ஆண்டுகளாக, இலங்கை அணியின் கேப்டனாக இருந்ததற்கு, பெருமைப்படுகிறேன். உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வரை மகிழ்ச்சிதான்.

ஆனால், கோப்பையை கைப்பற்றாமல், தோல்வியடைந்தது, மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. இதனால், அணியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, ஒருநாள் மற்றும் ’டுவென்டி-20' போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். இதன் மூலம் புதிய கேப்டனை நியமித்து, 2015 தொடருக்குள் சிறப்பாக தயார் செய்ய முடியும்” என்று கூறினார்.

05 April 2011

கிசுகிசு: நயன்தாரா - பிரபுதேவா திருமணம்

Posted by Gunalan Lavanyan 10:40 PM, under | No comments


இரண்டாவது திருமணத்துக்கு பிரபுதேவாவும், இரண்டாவது காதலுக்கு நயன்தாராவும் தயாரானதில் இருந்தே சினிமா வட்டாரத்தில் இவர்கள் பற்றி பல்வேறு கிசுகிசுக்கள் கிளம்ப ஆரம்பித்துவிட்டன.

இந்நிலையில் இந்த கிசுகிசு ஜோடி மும்பையில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருக்கிறது. எங்கேயும் காதல் திரைப்படத்தை இயக்கியிருக்கும் பிரபுதேவா, இந்தப் படம் வெளியானதும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.




முதல் காதல் மனைவி ரமலத்துடனான விவாகரத்து ஜூன் மாதம் கிடைக்கலாம் என்பதால், அந்த இனிப்புச் செய்தி (பிரபுவுக்கும் நயனுக்கும்தான்) வந்தவுடன் ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் நயன்தாராவை பிரபுதேவா திருமணம் செய்யலாம் என்று தெரிகிறது. முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது காதல் திருமணம் செய்திருக்கும் பிரகாஷ்ராஜின் ஆலோசனைப்படியே, மும்பையில் திருமணம் நடக்க யிருப்பதாகக் கூறப்படுகிறது.

நயன்தாராவை எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்? என்று பிரபுதேவாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, என் குடும்ப விஷயங்களை பத்திரிகைகள் மூலம் வெளிச்சம் போட விரும்பவில்லை, என்று பதில் அளித்தாராம்! ஹி... ஹி...

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுகிறாரா?!

Posted by Gunalan Lavanyan 8:53 AM, under | 1 comment

உலகக் கோப்ப போட்டிகள் முடிந்ததும் கிரிக்கெட் விளையாட்டிலிருந்தே சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறப்போவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், தற்போது சச்சின் வெளியிட்டிருக்கும் செய்தியே வேறாக இருக்கிறது.

sachin tendulkar


நடந்து முடிந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா கோப்பையை கைப் பற்றியதையடுத்து சச்சின் மிகவும் சந்தோஷத்தில் திளைத்து வருகிறார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியிருக்கும் இந்தக் கனவை முழுமையாக அனுபவிக்கப் போவதாக அவர் கூறியிருக்கிறார். அதனால் இப்போது ஓய்வு பெறுவதைப் பற்றி எந்த சிந்தனையும் இல்லை என்றும் சச்சின் கூறியிருக் கிறார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் களிடம் சச்சின் பேசியது வருமாறு:

”தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் என் மனதில் இல்லை. ஓய்வு பெற விரும்பினால், அப்போது வெளிப்படையாக அறிவிப்பேன். இப்போதைக்கு என் கவனம் முழுவதும் உலகக் கோப்பை கொண்டாட்டத்தின் மீது உள்ளது. விரைவில் அடுத்து நடக்கவுள்ள தொடர்களுக்கு தயாராக வேண்டும்.” என்று சச்சின் டெண்டுல்கர் கூறியிருக்கிறார்.

சச்சின் எங்கே ரிடயர்ட் ஆகிவிடுவாரோ என்று வருத்தத்தில் ஆழ்ந்திருந்த அவரது ரசிகர்களுக்கு, சச்சின் சொல்லியிருக்கும் வார்த்தைகள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கவலைக்கிடமான நிலையில் ஸ்ரீ சத்ய சாய்பாபா

Posted by Gunalan Lavanyan 8:18 AM, under | No comments

புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்திகிராமில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டுள்ள ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

புட்டபர்த்தி சாய்பாபாவிற்கு மார்ச் மாதம் 28-ம் தேதி நுரையீரல் கோளாறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இப்போது வெண்டிலேட்டரில் சுவாசிக்கும் பாபாவின் உடல்நிலை கவலை அளிப்பதாக இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

சத்ய சாய் உயர் மருத்துவ அறிவியல் மைய இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’பாபாவின் முக்கிய உடல் உறுப்புகள் சிகிச்சைகளை ஏற்கும் நிலையில் இல்லை. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. பாபாவுக்கு 85 வயதாகிறது.