05 April 2011

கவலைக்கிடமான நிலையில் ஸ்ரீ சத்ய சாய்பாபா

Posted by Gunalan Lavanyan 8:18 AM, under | No comments

புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்திகிராமில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டுள்ள ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

புட்டபர்த்தி சாய்பாபாவிற்கு மார்ச் மாதம் 28-ம் தேதி நுரையீரல் கோளாறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இப்போது வெண்டிலேட்டரில் சுவாசிக்கும் பாபாவின் உடல்நிலை கவலை அளிப்பதாக இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

சத்ய சாய் உயர் மருத்துவ அறிவியல் மைய இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’பாபாவின் முக்கிய உடல் உறுப்புகள் சிகிச்சைகளை ஏற்கும் நிலையில் இல்லை. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. பாபாவுக்கு 85 வயதாகிறது.

30 March 2011

நம் வழி தோனி வழி!

Posted by Gunalan Lavanyan 11:13 PM, under | 1 comment


பாகிஸ்தானும் இந்தியாவும் இன்று மோதிய உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாத்தில் இந்தியா வீழ்த்தியது. இதன்மூலம் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா மூன்றாவது முறையாக தகுதி பெற்றிருக்கிறது.







இந்திய வீரர்களின் சில மகிழ்ச்சித் தருணங்கள்...


இதற்குமுன் 1983இல் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் கபில்தேவ் இந்தியாவுக்கு கோப்பையை கைப்பற்றிக் கொடுத்தார். அதேபோல கங்குலி தலைமையிலான அணியும் 2002இல் உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரை சென்று ஆஸ்திரேலியாவிடம் வெற்றியை பறிகொடுத்தது.

ஆனால், நடைபெற்றுவரும் 2011 உலகக் கோப்பை போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி காலிறுதியிலேயே ஆஸ்திரேலியாவை விரட்டியடித்து பழிதீர்த்துக்கொண்டது. இப்போது அரையிறுதியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியதன் மூலம் வலுவான நிலையில் இலங்கை அணியை எதிர்கொள்ளப் போகிறது.

புதனன்று நடைபெற்ற அரையிறுப் போட்டியின் கதாநாயகனே எல்பிடபிள்யூதான்! இந்திய வீரர்களும் சரி, பாகிஸ்தான் வீரர்களும் சரி அதிக அளவில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்கள்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. ஆனால், சச்சின் 85, சேவாக் 38, ரெய்னா 36, கம்பீர் 27 ரன்கள் எடுத்து அணி 260 ரன்கள் சேர்க்க உதவினர். இதையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். ஒருகட்டத்தில் அதோகதிதான் என்று இருந்தபோது, நெஹ்ராவின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர். அதேபோல பந்துவீச்சில் யுவராஜ் சிங், முனாஃப் படேல், ஹர்பஜன் சிங், ஜாகிர்கான் ஆகியோரும் தலா 2 விக்கெட் கைப்பற்றி இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

நெஹ்ரா இன்று பந்துவீசப் போகிறார் என்று தெரிந்ததும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலர் தோனி தவறான முடிவு எடுத்திருக்கிறார் என்று பேசினார்கள். ஆனால், எப்போதும் தோனி பல முயற்சிகளையும் பரிசோதனைகளையும் செய்து பார்க்கும்போது அது வெற்றியையே அதிகம் தந்திருக்கிறது. சில நேரங்களில் தோல்வி ஏற்படும்போது துவண்டுபோகாமல் எப்போதும் புதிய அனுகுமுறையும், புதிய முயற்சியும் செய்து பார்ப்பதில் தோனி வல்லவர். அதை இந்த முறையும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

உலகக் கோப்பையையும் இந்தியா வெல்லும் என்று நம்பிக்கையோடு இருப்போம்!

நம் வழி தோனி வழி!

28 March 2011

வெட்கத்தில் நெளிந்த அனுஷ்கா!

Posted by Gunalan Lavanyan 11:46 PM, under | No comments

தெலுங்கில் சக்கைப்போடு போட்ட வேதம் படத்தின் தமிழ் ரீமேக்கான ’வானம்' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் பாலியல் தொழிலாளியாக கவர்ச்சித் தாரகை அனுஷ்கா தாராளம் காட்டியிருக்கிறார். படத்தில் இரண்டு ஹீரோக்கள். இரண்டுபேரும் காதல் காட்சிகளில் பின்னி யெடுப்பவர்கள். ஒருவர் சிம்பு. மற்றொருவர் பரத். வானம் படத்தில் அனுஷ்காவோடு சிம்பு நடித்தபிறகு அனுஷ்காவை புகந்து தள்ளுகிறார். படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின்போது அப்படி சிம்பு, அனுஷ்காவுக்கு புகழ்மாலை சூட்டியபோது அனுஷ் வெட்கத்தில் நெளிந்துவிட்டாராம். அரங்கத்தில் இருந்தவர்களுக்கு மூக்கில் வியர்க்காத குறைதான்! இருக்காதா பின்னே!





















வானம் படத்திலிருந்து சில காட்சிகள்...



ஆடியோ வெளியீட்டில் அனுஷ்கா!


26 March 2011

குள்ளநரிக் கூட்டம்

Posted by Gunalan Lavanyan 1:26 AM, under | No comments



இந்தப் படத்தில் வெண்ணிலா கபடிக்குழுவில் அறிமுகமான விஷ்ணுவும் - ராமன் தேடிய சீதை படத்தில் அறிமுகமான மலையாள வரவு ரம்யா நம்பீசனும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். இயக்குனர் சுசீந்திரனிடம் பணியாற்றிய ஸ்ரீபாலாஜிதான் படத்தின் இயக்குனர். அதனால், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் வெண்ணிலா கபடிக்குழு தொழில்நுட்பக் கலைஞர்களேகவே இருக்கிறார்கள்.